பதுளையை சேர்ந்த பெண்ணை காணவில்லை- பெண்னை இனங்காண்பவர்கள் தெரிவிக்கவும்…..

0
232

 

பதுளை ஹாலியல றொசைட் தோட்டம் இரண்டாம் பிரிவை சேர்நத மகாலிங்கம் நிஷாந்தினி என்ற பெண்ணை கடந்த 25நாட்களாக காணவில்லையென அவரின் கணவர் தியாகராஜா ராஜ்குமார் மட்டகுளிய பொலிஸ்நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்

பதிவு செய்யபட்ட முறைபாட்டில் இருந்து தெரியவருவதாவது ஹாலியல ரொஷட் தோட்டம் இரண்டாம் பிரிவை சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்ற பெண் மேற்குறிப்பிட்டுள்ள முகவரியை சேர்ந்தவர்யெனவும் இவர்கள் இருவரும் காதல் திருமணம் முடித்து கொழும்பு மட்டகுளிய இல.47 ஜீ சமத்திபுர எனும் முகவரியில்  வசித்த வந்ததாகவும் இவர்கள் இருவரும் வியாபாரத்தினை மேற்கொண்டு வந்த வேலை திடிர்ரென குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

39628866_314411019306439_4675673849952468992_n

குறித்த பெண்னை இனங்காண்பவர்கள் அருகாமையில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது மட்டகுளிய பொலிஸ்நிலையத்திற்கோ அல்லது 070 3397960அல்லது 0769746545ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேலை குறித்த காணாமல் போன பெண்ணிண் கணவர் மஸ்கெலியா சாமிமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கபடுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மட்டகுளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here