பதுளை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

0
187

பதுளை பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் 09.08.2018 அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.பதுளை பிரதேச சபை வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் உருத்திரதீபனும் கலந்து கொண்டார்.

கடந்த இரண்டாம் திகதி பதுளை பிரதேச சபை வளாகத்தில் வைத்து பதுளை பிரதேச சபையின் உறுப்பினரான முரளிதரன் என்பவரை பதுளை பகுதி முச்சக்கரவண்டி சாரதிகளினால் தாக்கப்பட்டு பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற கூடாது எனவும் தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here