பதுளை மக்களின் பிரச்சனையை தீர்க்க பதுளையில் ம.ம.மு காரியாலயம் திறந்து வைப்பு.

0
216
மலையக மக்கள் முன்னணியின் பதுளை காரியாலயம்  25/04/2020 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையிலுள்ள கட்டிடத்தில் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, பல்லே கட்டுவ, ஹாலிஎல, மடுல்சீமை, லுணுகெல போன்ற பிரதேசங்களின் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாகவே இக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ம.ம.மு செயலாளர் பேராசிரியர். விஜயசந்திரன், ம.தொ.மு பொதுச்செயலாளர் கே.சுப்ரமணியம்,ம.ம.மு பிரதி தலைவர் அ.லோரன்ஸ், ம.தொ.மு நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட ம.ம.மு கவுன்சில் உறுப்பினர்கள், இளைஞரணி, மகளீர் அணி தலைவர்கள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here