பத்தனையில் பதற்றத்தை ஏற்படுத்திய திருடன்! மக்களின் அதிரடி நடவடிக்கை!!

0
176

பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் மத்திய பிரிவு பகுதியிலுள்ள வீடுகளில் தனது கைவரிசையைக் காட்டுவதற்காக வந்த திருடன் ஒருவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது 05.02.2018 அன்று காலை 6 மணியளவில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு திம்புள்ள பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.05.02.2018 அன்று அதிகாலை 3 மணியளவில் வீடு ஒன்றில் திருட முற்பட்ட வேளையில், திருடனை கண்ட சிறுமி ஒருவர் கூச்சலிட்டபோது, அங்கு வந்த இளைஞர்களும், பொதுமக்களும், பாய்ந்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடனை மவுண்ட்வேர்ணன் காட்டுப்பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து நையப்புடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து திம்புள்ள பத்தனை பொலிஸாரிடம் குறித்த திருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

அத்துடன் குறித்த திருடனிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல தோட்டப் பகுதிகளில் 05.02.2018 அன்று அதிகாலை திருடர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பொலிஸாருக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Image may contain: tree, plant, sky, outdoor and natureImage may contain: 1 person, standing, walking, crowd and outdoor

கைது செய்யப்பட்ட குறித்த திருடனை சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சையின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here