இந்துமா சமுத்திரத்தின் முத்தெனனவும் குபேரபுரியெனவும் போற்றப்படும் இலங்கை திருநாட்டின் உலக புகழ்பெற்ற டெவோன் நீர்வீழ்ச்சியின் தொடக்கத்தில் எழில் கொஞ்சும் மலை பகுதியில் எளுந்தருளியுள்ள பத்தனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தினை முன்னிட்டு இன்று எண்ணைய் காப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.
புணரவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ பிரதிஸ்டா கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தினை முன்னிட்டு கர்மாரம்பரம் நேற்று காலை விநாயகர் வழிபாடு புண்ணியாக வாஜனம்,தேவப்பிராமன அனுக்ஞை, முகூர்த்த பத்திரிகாயாடனம்,திரவ்யசுத்தி, திரவ்யயாகம், மஹா கணபதி ஹோமம், லக்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாந்தி, சம்ஹிதா ஹோமங்கள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்று (04) ம் திகதி விநாயகர் வழிபாடுடன் துவஜா பூஜை,யாகசாலை பிரவேசம்,அக்னி கார்யம், விசேட திரவிய ஹேமம், நடைபெற்று தைலாப்பியங்கள்,ஆகியன இடம்பெற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளன.
மூன்றாம் நாளான நாளை காலை 6.00 மணி முதல் விநாயகர் வழிபாடு, புண்ணியவாஜனம், ஆச்சார்ய சாந்தி, விசேட பூஜைகளும் விசேட ஹோமங்களும் இடம்பெற்று வேத ஸ்தோத்திர திருமுறை பாராயணங்கள் ஓதப்பட்டு வேத வாத்தியங்கள் இசை முழங்க அந்தர்பலி, யாத்திராதானம்,கும்ப உத்தாபனம், ஸ்தூலலிங்க ஸ்தூபி அபிஷேகம்,ஆகியன இடம்பெற்று,9.10 தொடக்கம்,10.31 வரையுள்ள,ரிஷிப லக்கின சுபமுகூர்த்த சுப வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனை தொடர்;ந்து தசமங்கள தரிசனம்,எஜமான் அபிஷேகம்,ஆசியுரை,மஹா அபிஷேகம், மகேஸ்வர பூஜை இடம்பெற்று பக்த அடியார்களும் விபூதி பிராசாதம் அன்னதானம் ஆகியன வழங்கப்படும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு முருகனின் திருவருளை பெற்று வாழ்வு வளம் பெற வேண்டும் என அனைவரையும் அழைக்கின்றனர். பத்தனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பரிபாலன சபையினர்.
மலைவாஞ்ஞன்