பத்திரிகை செய்திக்காக மாத்திரம் பார்வையிட்டு செல்லாது பல பாகங்களிலும் பணி செய்து வருகிறோம்- மறே வீடமைப்பு ஆரம்ப விழாவில் திலகர் எம்.பி

0
176

மலையகத்தில் பல மாவட்டங்களிலும் இன்று பல வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன. மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்போது அனர்த்தங்கள் நிகழும்போது வந்து பார்வையிடுவதோடு மட்டுமில்லாமல் நாம் உரிய அமைச்சுகளையும் அதிகாரிகளையும் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நோர்வூட் நிவ் வெளியில் இதுவே நடைபெற்றது. நாம் அமைச்சர்களை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புனர் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைக்கிறோம். அத்தகைய நடவடிக்ககளை கேள்வி பட்டு அவசரமாக சிலர் ஓடிவந்து “ஆமி” யை வைத்து பாதை அமைக்கப் போவதாக பத்திரிகைகளுக்கு படம் காட்டி செல்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியீட்டத்தில் மஸ்கெலியா, நல்லத்தண்ணி, மறே தோட்டத்தில் 25 வீடுகளைக் கொண்ட புதிய கிராமத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (19/10) நடைபெற்றது. தொழிலாளர் தேசி முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சர் திகாம்பரத்தின் இணைப்பு செயலாளருமான க.நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் ரட்ணசாமி, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சுப்பிரமணியம், ராஜ் அசோக், அர்ஜூன் அமைப்பாளர்கள் வாசு, பத்மநாதன், சிவராஜ், தோட்ட முகாமையாளர்கள் உள்ளிட்ட முக்கியத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடமைப்புத் திட்ட பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன் பொரெஸ், வாழமலை தோட்டங்களிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்படி கருத்தினை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு மலையக மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தாபிக்கப்பட்டது. அதனை மேலும் வலுப்படுத்த நாம் அமைச்சுக்கு கீழ் இயங்க கூடி அதிக அஅதிகாரங்களைப் கொண்ட புதிய கிராமங்களை உருவாக குவதற்கான அதிகார சபை ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். விரைவில் அதிகார சபை அதன் பணிகளை ஆரம்பிக்கும். அதன்போது இது போன்ற வீடமைப்புத் திட்ட பணிகளை நாம் அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ள முடியும். மறே தோட்டத்தில் இந்த வீடமைப்புத் திட்டம் அமையவுள்ள இடம் சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடம். வீடமைப்புத் திட்டம் நிறைவுறும்போது அழகான சூழலில் பெறுமதியான வீடுகளைக் கொண்டதாக அமையும். அத்தகைய வீடுகளுக்கு காணி உரித்துகளும் வழங்கப்படும். அவை உங்கள் எதிர்கால சந்ததியினருக்கானது. சுற்றுலா நோக்கங்களுக்காக எவராவது உங்களிடம் இந்த வீடுகளை விலைபேசி வாங்க வருவார்கள். இவற்றை விற்பனை செய்து உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்கிவிட வேண்டாம் என வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் மலையகப் பகுதிகளில் எமது மக்களுக்கு என திட்டமிடப்பட்ட அபிவிருத்தி பணிகளை சுழற்சி முறையில் மாவட்ட வாரியாகவும் பிரதேச வாரியாகவும் மேற்கொண்டு வருகிறோம். இருந்த போதும் கூட மலையகப் பகுதிகளில் திடீர் அனர்த்தங்கள் நிகழும் போது நாம் இடர் முகாமைத்துவ அமைச்சினைப் போன்றும் செயற்படவேண்டியுள்ளது. நோர்வூட் நிவ்வெளி பகுதியில் ஏற்பட்ட திடீர் அனர்த்த்தின் போதும் நாம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை இன்று சமூக பிரச்சினையாக உருவாகியிருக்கின்ற நிலையில் நாம் தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஜனாதிபதியை சந்தித்து அது குறித்து பேசினோம். அதே நேரம் தொழில் அமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். இந்த வேலைகளுக்காக கொழும்பில் நாம் நின்ற சமயம் கொட்டகையில் இருந்தவாறே பிரதமரிடம் நிதியைப் பெற்று இராணுவத்தினரை வைத்து நோர்வூட் பாதையை புனரமைக்கப் போவதாக பத்திரிகைக்கு படம் காட்டி செ்னறுள்ளார்கள். நாளை வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என அவர்கள் சொன்ன தகவல் உண்மைதான். ஆனால், ஆரம்பித்து வைத்தவர்கள் அவர்கள் அல்ல நாங்கள் என்பதை இன்று மக்கள் நேரடியாக பார்த்து உணர்ந்து கொண்டார்கள். பொய் நாடகம் ஆடுபவர்களையும் புரிந்து கொண்டுள்ளார்கள்.

மண்சரிவு அபாயம் ஏற்பட்ட இடத்தில் வீதியை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையே அதிகாரம் உள்ள நிறுவனம், அதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனை தேவை, மாவட்ட செயலாளரின் அனுசரணை தேவை. நாம் இதனையல்லாம் மேற்கொண்டு அவர்களை அழைத்து கலந்தாலோசித்து இன்று வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து உள்ளதுடன் பாதிப்புற்ற மக்களுக்கு அவர்களது சம்மதத்துடன் மாற்று காணிகளையும் அடையாளம் கொண்டுள்ளோம். இது இவ்வாறிருக்க இராணுவ அதிகாரி ஒருவரை அழைத்து வந்து இந்த வீதியை தாங்கள் அமைக்கப் போவதாக கூறுவது கபடநாடகமாகும். தவிரவும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஈ.பி. எப் ஐ தின்றுவிட்டதாக போலி பிரச்சாரம் செய்தவர்கள் அதே பிரதமரிடம் நிதி பெற்று பாதையை புனரமைப்கதாக கதை விடுவது வெட்கக் கேடானது. பிரதமர் இந்தியா சென்றுவிட்ட நிலையில் இவர்கள் எங்கே சந்தித்தார்கள் என தெரியவில்லை. எல்லாமே பத்திரிகையில் படம் வருவதற்கான ஊடக நாடகங்கள் என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here