பத்துவயது குழந்தையிடம் நான்குமாத குழந்தையை கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற நபரால் பரபரப்பு

0
154

ஹொரணை, எடடுகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு போதைப்பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் வந்து நான்கு மாதக் குழந்தையை பத்து வயதுக் குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, ​​ஒரு நபர் சிறு குழந்தையுடன் வந்து, தனது மகனிடம் சிறு குழந்தையை கொடுத்துவிட்டு விரைவில் வருவேன் என்று கூறிவிட்டு, இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும், அந்த நபர் வரவில்லை என, தாய் தெரிவித்தார்.

ஹொரணை தலைமையக காவல் பரிசோதகர் உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி திருமதி.எல்.டி.லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் (11.07.2023) வீட்டிற்கு சென்று குழந்தையை கொண்டு சென்றுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றதாக காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

விசேட காவல்துறை விசாரணை
பத்துவயது குழந்தையிடம் நான்குமாத குழந்தையை கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற நபரால் பரபரப்பு | A Four Month Old Baby Given Ten Year Old Child

பத்து வயதுக் குழந்தையைக் காவலில் வைத்துள்ள நிலையில் தப்பியோடிய நபர் தீவிர போதைக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரைக் கைது செய்ய விசேட காவல்துறை குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரதம காவல்துறை பரிசோதகர் பி.எஸ்.பனாவல தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பெண் உப காவல்துறை பரிசோதகர் லியனகே, காவல்துறை கான்ஸ்டபிள் 15447 ஸ்ரேயந்த ஆகியோர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here