பத்மேவின் போதைப்பொருள் தயாரிப்பு திட்டம்; மொட்டு கட்சி உறுப்பினர் கைது

0
22
arrest

மித்தெனியவில் ‘ஐஸ்’போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரசாயனங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியால் மனம்பேரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘ஐஸ்’ போதை பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 50,000 கிலோகிராம் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தில் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

தலாவ, மித்தெனியவில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட காவல்துறை சோதனை நடவடிக்கையின் போது இந்த விடயம் தெரியவந்தது.

குறித்த ரசாயனங்கள் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே என்பவரால் இறக்குமதி செய்யப்பட்டு நுவரெலியாவில் உள்ள வாடகை வீடொன்றில் பாகிஸ்தானியர்களின் உதவியுடன் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் முன்னாள் SLPP பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மற்றும் பியால் மனம்பேரி சகோதரர்கள் இந்த ரசாயனங்களை மறைப்பதற்கு பொறுப்பேற்றதாக புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த கைது இடம்பெற்றுளளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here