இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து குழாத்தில் ஜேமி ஓவர்டன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (ECB & Wales) கிரிக்கெட் சபை ஓவல் நகரில் இடம்பெறவிருக்கும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான அணிக்குழாத்தினை இன்று வெளியிட்டிருந்தது.
இந்த குழாத்திலேயே இங்கிலாந்து அணிக்கு ஆறாவது மேலதிக வேகப்பந்துவீச்சு பலமாக ஜேமி ஓவர்டன் மாறியிருக்கின்றார். இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் புதிய பந்துவீச்சாளர் ஒருவரினை இணைக்கும் என இங்கிலாந்து தலைவர் பென் ஸ்டோக்ஸ் முன்னதாக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையிலையே ஜேமி ஓவர்டனினை இணைப்பும் இடம்பெற்றிருக்கின்றது.
அதேவேளை இந்திய – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 31 ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கிலாந்து குழாம்
பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்ஸன், ஜேக்கப் பெத்தேல், ஹர்ரி ப்ரூக், ப்ரைடன் கார்ஸ், ஷேக் க்ராவ்லி, பென் டக்கட், ஜேமி ஓவர்டன், ஒல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஸ் டங், கிறிஸ் வோக்ஸ்