கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் தேயிலை மலையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த “அக்குபட்டாஸ்” வெடித்து (52) வயது பெண் தொழிலாளி ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (16)இடம்பெற்றுள்ளது .
பூப்பனை தோட்ட விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வீதியின் மேற்பகுதியில் உள்ள தேயிலை மலையிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.