கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று (25) நீக்கப்பட்டதனை தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.
மலையக நகரங்களில் உள்ள கடைகள் இன்று திறக்கப்பட்டதுடன் மக்கள் வழமை போல் பொருட்கள் கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தன.
சுகாதார பிரிவுகள் கடுமையாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை அறிவுறத்தப்பட்டள்ளதனால் இன்று காலை வேளையில் குறைந்தளவு மக்கள் நகரங்களுக்கு வருகை தந்திருந்ததுடன் அவர்கள் அனைவரும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெனிகளை பேணி பொருட்கள் கொள்வனவு செய்தனர்.
மாகாணங்களுக்கு கிடையிலான பொது போக்குரவத்தது தொடர்ந்தும் தடை தளர்த்தப்படாததால் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.
இதனால் புகையிரத்தத்தில் செல்லும் அரச அலுவலர்கள்,பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்தி தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பின் மதத்தலங்களில் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய மட்டுபடுத்தப்பட்ட பக்த அடியார்களின் பங்களிப்புடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
கே.சுந்தரலிங்கம்