பயணத்தடையால் தடையால் மீண்டும் முடங்கின மலையக நகரங்கள்.மீறுவோருக்கு எதிராக டும் சட்டநடவடிக்கை

0
171

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஒரு மாதகால பயணத்தடையினை தொடர்ந்து கடந்த 21 திகதி பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டன.
இதனால் கடந்த மூன்று நாட்கள் மக்களின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மூடப்பட்டிருந்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன.

தொழில் நிறுவனங்கள் அரச அலுவலகங்கள் திறக்கப்பட்டதுடன் பொது போக்குவரத்தும் இடம்பெற்றதனால் முடங்கி கிடந்த மலையக நகரங்கள் வழமை நிலைக்கு திரும்பியிருந்தன.

எனினும் நேற்று இரவு 10 மணி முதல் (24) அதிகாலை நான்கு மணி வரை மீண்டும் பயணத்தடை விதிக்கப்பட்டதனால் மீண்டும் மலையத்தில் உள்ள பிரதான நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டிருந்ததுடன் ஒரு சில அத்தியசிய தேவைகள் மாத்திரம் இடம்பெற்றன.  பயணத்தடையினை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வீதி தடைகளை ஏற்படுத்தி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்தனர்.

நகரங்களிலும் ஒரு சில தோட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்று ஹட்டன் பகுதிக்கு பயண அனுமதி பத்திரமின்றி வருகை தந்த வாகனங்கள் மற்றும் கால அவதியான அதிபத்திரங்களை வைத்துக்கொண்டு வருகை தந்தவர்கள் திருப்பியனுப்பபட்டன.

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here