பரபரப்பாகும் கொழும்பு – கோட்டாபயவின் வீட்டுக்கு தீவிர பாதுகாப்பு – அதிரடி படையினர் குவிப்பு!

0
202

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பொலிஸ் பிரதானிகள் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் பணிப்புரை விடுத்துள்ளனர்.
தீவிர பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் ஈடுபடுமாறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை தொடர்பில் அவரது செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிடம் ஊடங்கள் வினவிய போது, ​​இன்னும் சில தினங்களில் கோட்டாபய ராஜபக்ச இலங்கை வரவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இதனை தனக்கு தெரியப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

CNN செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here