பரீட்சை திகதிகளில் மாற்றம் இல்லை: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

0
171

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இது குறித்த கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான செயன்முறை பரீட்சைகளை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அமைச்சு மட்டத்திலான தீர்மானத்தின் பின்னரே இது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.ஷ

இதேவேளை, மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விண்ணப்ப பத்திரங்களை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் அனுப்பி நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை அனுப்புவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here