பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் இருந்த படகொன்றில் இருந்த நபர் இன்று (19)அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக, படகில் இருந்து விழுந்து காணாமல் போயுள்ளார்.
விபத்தில் சிக்கிய படகில் 6 மீனவர்கள் இருந்ததாகக் இது குறித்து மீன்வளத் துறை பணிப்பளார் ஜெனரல் சுசந்த கஹவத்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி படகு புறப்பட்டு சென்று இன்று கரைக்குத் திரும்பியபோது, பேருவளை கடலுக்கு அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இதில் காணாமல் போயுள்ளார்.