பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இரு குழந்தைகளின் மரணம்! தாய் செய்த விபரீத செயல்!

0
208

இரத்தினபுரி – கரபிஞ்ச சான்ட் ஜோகிம் தோட்டத்தில் கிணறு ஒன்றிற்கு அருகில் உள்ள காட்டில் இருந்து ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரண்டு குழந்தைகளின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயதுடைய கஜேந்திரகுமார் சர்வநாத் மற்றும் ஒன்றரை வயதுடைய கஜேந்திரகுமார் நிஷாத் ஆகிய இரு குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் தாயான இருபத்தி ஒன்பது வயதுடைய பெண் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிள்ளைகளின் பெற்றோருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகராறு ஏற்பட்டதையடுத்து குழந்தைகளின் தாய் பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here