பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை வீரர் தில்ஹாமுக்கு பீபா அபராதம்

0
4

இலங்கை உதைபந்து அணி வீரர் முஹமட் தில்ஹாம், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச உதைபந்து போட்டியின்போது பலஸ்தீனத்தை ஆதரித்து அரசியல் செய்தியை வெளியிட்டதற்காக அவருக்கு சர்வதேச உதைபந்து சம்மேளனம் 2 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏ.எப்.சி ஆசியகிண்ணம் 2027 தகுதிச் சுற்றில் இலங்கை அணி, சீன தைபேயை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தை தொடர்ந்து தில்ஹாம் போட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டத்தில் தனது அணியினருடன் சேர்ந்து, தனது ஜெர்சியை உயர்த்தி, தனது உள்ளாடையின் மீது எழுதப்பட்ட ‘பலஸ்தீனத்தின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்ற வாசகங்களை வெளிப்படுத்தினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் தில்ஹாம் விளையாடவில்லை என்றாலும், ஆசிய உதைபந்து கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து, சர்வதேச உதைபந்து சம்மேளனம் அதன் ஒழுங்குமுறை குறியீட்டை மீறியதாகக் குறிப்பிட்டது, இது போட்டிகள் அல்லது தொடர்புடைய நிகழ்வுகளின் போது அரசியல், மத அல்லது தனிப்பட்ட வாசகங்களைத் தடைசெய்கிறது.

இதன் விளைவாக, தில்ஹாமுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இது உதைபந்தில் அரசியல் நடுநிலையைப் பேணுவதில் பீபாவின் கடுமையான நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here