பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது.

0
249

2020 உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்கிய மூன்றாவது கொவிட்-19 அலையின் தாக்கம் காரணமாக உண்டான பல சிக்கல்களினால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட வாரியான சதவீதங்களை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டது.

அதன்படி மொத்தம் 40,000 விண்ணப்பதாரர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பட்டங்களுக்கான பல்கலைக்கழக சேர்க்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2020 உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2021 டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு கூறியுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk   என்ற இணையளத்தளத்துக்கு பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்துகொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here