பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை

0
159

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில்செய்தி வெளியாகியிருந்த நிலையில் இவரது மரணம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழந்த மாணவனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here