7 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (07) பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.