பல்வேறு அச்சுறுத்தல்களால் வீதியில் இறங்க முடியாது – பாதுகாப்பு கோரும் எம்பி அர்ச்சுனா

0
99

தனக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவை என யாழ்.மாவட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தாம் மேற்கொண்ட நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளார்.

10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் இராமநாதன், எதிர்க்கட்சித் தலைவருக்கென ஒதுக்கப்பட்ட பாரம்பரிய ஆசனத்தில் அமர்ந்திருந்ததுடன், அது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளார்.

இதன் பின்னரும் இந்த எம்.பி இனவாத கருத்துக்களை வெளியிட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இச்சம்பவங்களினால் தமக்கு கடும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் நேற்று (25) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆசன சம்பவத்தினால் வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு ஊடகங்களுடன் 40 – 50 நிமிடங்கள் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக தனக்கு பாதுகாப்பு தேவை என்றும், எப்போது கிடைக்கும் என்றும் எம்.பி.அர்ச்சுனா வினவியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here