பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெஞ்சர் தோட்டமக்கள் ஆர்பாட்டம்
மடுல்சிம தேயிலை பியிர்செய்கை கம்பனிக்கு சொந்தமான நோர்வூட் வெஞ்சர் தோட்டமக்கள் மக்கள் 22.01.2018 திங்கள் கிழமை காலை 08 மணி முதல் காலை 10.30 மணி வரை வெஞ்சர் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
குறித்த வெஞ்சர் தோட்ட தேயிலை தொழிற்சாலை சுமார் ஒரு வருடகாலமாக மூடபட்டு காணபடுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 21.01.2018 ஞாயிற்றுகிழமை தேயிலை கொழுந்து ஏற்றிவந்த ஊந்துருளி விபத்துக்குள்ளானதில் 06பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியவர்களுக்கு நஷ்டஈடு கேட்டும் குறித்த ஊந்துருளி சாரதியை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறியும் கோரியும் வெஞ்சர் தோட்டமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் வெஞ்சர் கிழ்பிரிவு மேற்பிரிவு 57ஆகியே தோட்டமக்களை சேர்ந்த சுமார் 200கும் மேற்பட்ட தொழிலாளர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.
ஆர்பாட்டத்தின் பின்னர் தோட்டமக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய வெஞ்சர் தோட்டமுகாமையாளர் ஜானக்கஜயவர்தன குறித்த தோட்ட தேயிலை தொழிற்சாலையை இன்னும் 03நாட்களில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட உள்ளதாகவும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கும் மற்றும் குறித்த சாரதியினை இடமாற்றம் செய்வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள படுமெனவும் முகாமையாளர் உறுதிவழங்கியமைக்கு பிறகு ஆர்பாட்டத்த்தில் ஈடுபட்டமக்கள் கலைந்து சென்றனர் .
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்