பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

0
162

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (08.04.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம்
அதன்படி ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும்.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் பூண்டின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாவாக பதிவாகியுள்ளது.ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

மேலும் சிவப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும், வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here