பல வருட காலமாக குன்றும் குழியுமாக இருந்த பாதையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு மக்கள் நன்றி.

0
239

தரவலை மக்கள் பயணிக்கும் பாதையினை அபிவிருத்தி செய்ய அமைச்சர் மஹிந்தாநந்த நடவடிக்கை. மக்கள் அரசாங்கத்திற்கும் அமைச்சருக்கும் மக்கள் பாராட்டு

டிக்கோயா தரவலை மேல் பிரிவு குடியிருப்புக்களுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தும் பாதையினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தமைக்காக அப்பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுகமே அவர்களுக்கும் நன்றியினையும் பாரட்டினையும் தெரிவிக்கின்றனர்.

டிக்கோயா மேல்பரிவு தோட்டத்திலிருந்து டிக்கோயா தரவலை பிரதான பாதையினை இணைக்கும் பாதை சுமார் ஐந்து லட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் இட்டு புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிக்கோயா தரவலை மேல் பிரிவு தோட்டத்தில் வாழும் சுமார் 150 மேற்பட்ட குடும்பங்கள் டிக்கோயா கிளங்கன், டிக்கோயா நகரம், ஹட்டன், டிக்கோயா நுண்கலை கல்லூரி டிக்கோயா ஆரம்பபிரிவு பாடசாலைகளுக்கும் செல்வதற்கு பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் குறித்த பாதையினையே பயன்படுத்துகின்றனர்.

குறித்த பாதை பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டதனால் பொது மக்கள் மலையகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளிடமும் தொழிசங்க பிரதிநிதிகளிடமும் கோரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் அதனை செய்து தரவில்லை. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும். இதுகுறித்து அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து அவர் எவ்வித சந்தா பணமும் அறிவிடாத நிலையில் குறித்த பாதையினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எஞ்சிய பகுதியினையும் அபிவிருத்தி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்

மலையகத்தில் இருபது முப்பது வருடகாலமாக உள்ள கட்சிகள் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடம் நாங்கள் இந்த பாதையினையும் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த தொடர் குயிருப்பினையும் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தோம் ஆனால் இது வரை பலர் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறித்த பாதையின் ஊடாகத்தான் பாடசாலை செல்லும் சுமார் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள், டிக்கோயா மற்றும் ஹட்டன் நகரங்கும் செல்லும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் நாளாந்தம் பயன்படுத்துகின்றனர்.

ஆகவே இந்த பாதையினையும் நாங்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பாரிய பிரிச்சினையாக காணப்படுகின்றது பழமை வாய்ந்த மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தொடர் குடியிருப்பினையும் செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here