தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனிதிகாம்பரம் 20.12.2018. வியாழக்கிழமை காலை 10.30மணி அளவில் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமூதாய
அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு நோர்வூட் பகுதியில் பாற்சோறு சமைத்து பட்டாசு கொழுத்தி ஆரவாரத்தினை கொண்டாடினர்.
இதன் போது ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களும் தொழிலாளர் தேசியசங்கத்தின் ஆதரவாளர்கள் மலையக
மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ். )