‘பவித்ரா வன்னியாராச்சியின் முடிவு சட்டவிரோதமானது’ நீதிமன்றம் தீர்ப்பு

0
109

இலங்கை வைத்திய ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியர் வஜிர திசாநாயக்க நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார், அதன் பிறகு அவர் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

நீதிமன்றத்தின் முடிவை ஏற்று பதவி விலகியதாக
அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆணைக்குழுவின் புதிய தலைவரை நியமிக்கப்படவுள்ளார்.

2020 ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இலங்கை வைத்திய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா மற்றும் நான்கு பேரை பதவி நீக்கியதை தொடர்ந்து அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் அந்த நடவடிக்கையை ரத்து செய்து, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று தீர்ப்பளித்தது.

பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் , வழக்கு இறுதியாக நேற்றைய தினத்துக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

எவ்வாறாயினும், பேராசிரியர் சில்வா மற்றும் ஏனையோரின் பதவிக்காலம் ஏற்கனவே காலாவதியாகிவிட்ட நிலையில், அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here