பஸ் மற்றும் பொது இடங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், அது தொடர்பான முறைப்பாடுகள் குறைவடைந்து வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரான பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த குற்றங்களுக்காக ஒரு நாளுக்கு 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை இரண்டாக குறைவடைந்துள்ளது.
மற்றும் பொது இடங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.