கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம்பொல – கொட்டுகொட வீதியில் நெதகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கெஹெல்பத்தர, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
இந்த விபத்து தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.