பஸ் மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

0
227

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் நேற்று ஏற்பட்ட பஸ் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தனியர் சொகுசு பஸ் நேற்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு பிரயாணித்த போது கொழும்பு – சத்துருக்கோண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது தோதியதை அடுத்து சம்பவ இடத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், பஸ்சாரதியை கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் கொக்குவில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் போது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here