கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் உலப்பனை மாவெல சந்தியில் வாகனங்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 31.08.2018 அன்று மதியம் 12.30 மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும், நாவலப்பிட்டியிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், தெய்வாதீனமாக பஸ்ஸில் பயணித்தவர்களுக்கும், லொறியில் பயணித்தவர்களும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் கம்பளை பொலிஸார், பஸ் சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்