பாகிஸ்தானின் இராணுவ தளபதி நாட்டுக்கு விஜயம்

0
4

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்த மாத இறுதியில் இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் ஜூலை 21 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விஜயத்திற்குப் பிறகு பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருகைகளின் போதும், இருதரப்பு நலன் சார்ந்த விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கான இந்தோனேசியாவின் பொறுப்பாளர் ரஹ்மத் இந்திர்தர்தா குசுமா, பாகிஸ்தானுக்கும் தனது நாட்டிற்கும் இடையே உயர் மட்ட தொடர்புகள் குறைவாக காணப்படுவதாக அண்மையில் பேசினார். எனவே, இந்த விஜயம் இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here