பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது!

0
5

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து போட்டி மத்தியஸ்தர் எண்டி பைக்ராஃப்ட் (Andy Pycroft) மாற்றப்பட்ட வேண்டும் என்ற பாகிஸ்தான் அணியின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது.

இந்த நிராகரிப்பு குறித்து நேற்று இரவு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நாணய சுழற்சியின்போது இந்திய அணித்தலைவருடன் கைகுலுக்குவதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் தலைவர் சல்மான் அலி ஆகாவிடம் எண்டி பைக்ராஃப்ட் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிருப்தியை வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், நாணய சுழற்சியின்போது கைகுலுக்கும் நடைமுறைகள் இருக்காது என்று மைதானத்தில் இருந்த ஆசிய கிரிக்கெட் பேரவை அதிகாரிகள் எண்டி பைக்ராஃப்ட்டிடம் கூறியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை நியாயப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கடிதம், சூழ்நிலையை தெளிவுபடுத்தி, போட்டி மத்தியஸ்தர் இந்திய அணியின் சார்பாக செயல்படுகிறார் என்ற பாகிஸ்தானின் கருத்தை நிராகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here