மில்லியன் கணக்கான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை
பாகிஸ்தானில் கண் அழற்சி பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 56,000க்கும் அதிகமான பாடசாலைகள் இவ்வாரம் முழுவதும் மூடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண் அழற்சி காரணமாக கண்கள் சிவந்து போவது, கண்களில் அரிப்பு ஏற்படுவது, கண்களில் நீர் கசிவது, ஆகியவை ஏற்படுகின்றன. சளி இருமல் வழியாக இந்த வைரஸ் பரவுகிறது.
இதன் காரணமாகவும் இந்த வைரஸுக்கு எதிராக மாணவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் இவ்வாறு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, பஞ்சாப் மாநிலத்தில் மாத்திரம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து 357,000 கண் அழற்சி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், மில்லியன் கணக்கான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.