பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியுள்ளது.
காபூலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, அமைதிப் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைகளை கடுமையாக விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ஆப்கானிஸ்தானைக் குறை கூற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் எந்த தீவிரவாத சம்பவமும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இது நியாயமற்ற அல்லது சாத்தியமற்ற கோரிக்கை என்றும் முத்தாகி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு ஆப்கானிஸ்தான் பொறுப்பா என்றும் அவர் கேட்டுள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பை வழங்குவது ஆப்கானிஸ்தானின் பொறுப்பு அல்ல என்றும் முத்தாகி கூறியுள்ளார்.




