கிரிக்கெட் உலகிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் இரண்டாவது உலக சம்பியன்ஸ் ஒப் லெஜெண்ட்ஸ் ரி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் மோதுகினறன. இந்த தொடரில் நேற்று மாலை பர்மிங்காமில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் இரத்து செய்யப்பட்ட இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கபட்டது.