பாகிஸ்தான் – கராச்சியில் இடம்பெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

0
188

பாகிஸ்தானின் கராச்சியில் சனிக்கிழமையன்று இடம்பெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடிப்பிற்குப் பின்னர் இடிந்து விழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அதிகாரிகள் இன்னும் முயற்சித்து வருகின்றனர் என்று அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தின் பின்னர் பொலிஸ் மற்றும் மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுவதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந் நிலையில் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் இதன் பின்னணி குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை எரிவாயு கசிவு அல்லது வெடி மருந்துகள் வெடிப்பினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here