பாகுபாடுகளால் பெண்களுக்கே அதிக பாதிப்பு – மன்னாரில் பிரதமர் உரை!

0
12
“இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், இவ்வாறான அநீதிகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும் அடங்குவர் என்பதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னார், அடம்பன் பகுதியில் நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரமதர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பித்துள்ள மாற்றத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு, பலமான அதேவேளை அனைவரையும் உள்ளடக்கிய பெண் தலைமைத்துவம் அவசியமாகும். இந்த மாற்றத்தை வடிவமைப்பதில் பெண்கள் முன்வந்து தீவிரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென அழைப்பு விடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பாரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டம் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அது வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here