நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் சிக்கல் காரணமாக ஊட்டசத்துக்கான தேவை மாணவ மணிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது அதை உணர்ந்து தோற்ற உட்பட்ட அமைப்பு நீர் வளங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் தாய்வான் அரசோடு ஏற்படுத்திய பேச்சுவார்த்தையின் பயனாக அங்கு இருக்கின்ற அரசு சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக சுமார் 1000 மெட்ரிக் டோன் அரிசி மூன்றாம் நிலை பாடசாலை மாணவ மணிகளுக்கு கிடைப்பதற்கான வழி வகுத்துள்ளார்
ஒரு சமூகத்துக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவு விடயத்தில் முழு அக்கறை செலுத்தினார் ஜீவன் தொண்டமான்
நேற்று நானுஓயா நாவலர் பாடசாலை லிந்துல மௌசால பாடசாலை மட்டுக்களை பாடசாலை அக்ரகந்த பாடசாலை தங்க கலை பாடசாலை கிரான்லி மேல் பிரிவு பாடசாலை டெல் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ மணிகளுக்கு ஊட்டச்சத்துக்கான அரிசி வழங்கி வைக்கப்பட்டது ஒருவருக்கு 30 கிலோ விதம் அந்தப் பாட சாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவ மணிகளுக்கும் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது
குறிப்பிட்ட நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ பி சக்திவேல் மற்றும் உப தலைவர் எஸ் சச்சிதானந்தன் தலைமையில் அனைத்து பாடசாலைகளில் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பிரதேச சபை தலைவர் முன்னாள் தலைவர் ராமன் கோபால் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
டி சந்ரு