பாடசாலைகளில் புலனாய்வுப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை – இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

0
153

பாடசாலைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கான திட்டத்தினை உருவாக்க வேண்டும். பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி ‘புதிய சமூக புலனாய்வுப் பிரிவு’ ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாடுமுழுவது போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு தவறிய பொலிஸாரை பாடசாலைக்குள் வரவழைத்து ‘புதிய சமூக புலனாய்வுப் பிரிவு’ ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்தை எதிர்ப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து புதிய சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்ததை அடுத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை கட்டமைப்பிற்குள் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் நோக்கம் உண்மையிலே அரசாங்கத்திற்கு இருக்குமானால், நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு பாடுபடவேண்டும் என ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கான திட்டத்தினை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கான திட்டத்தினை உருவாக்க முடியவில்லை எனவும், போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை தடுக்க முடியவில்லை எனவும் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அதனை பாடசாலைக் கல்வி முறைமையின் ஊடாக செயற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here