” பாடசாலைகளை மீள திறக்கும் திகதி தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கொவிட் – 19 நிலைமை தொடர்பில் மீளாய்வுகள் இடம்பெற்றுவருகின்றன. மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய சூழல் உருவானதும், விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும்.”
இவ்வாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.