பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தாமதிக்க வேண்டிய அவசியம் கிடையாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோய் எதிர்ப்பு பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவகே தெரிவிக்கின்றார்.
இதன்படி ,பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கை உள்ளிட்ட 23 நாடுகள் மாத்திரமே, மே மாதம் முதல் பாடசாலைகளை மூடியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும் ,யுனிசெப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஹென்ரிடா போ மற்றும் யுனேஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒடி அசோலே ஆகியோரை மேற்கோள்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.