தெபல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளை காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் பிபில பிரதேசத்தில் உள்ள சிறுமிகள் காப்பகத்தைச் சேர்ந்த மாணவிகளே காணாமற் போனவர்களாவர்.
பாடசாலை புத்தகப்பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு
தமது பாடசாலை புத்தகப்பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு இவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி சென்ற நிலையில் மீண்டும் வகுப்பறைக்கு வருகை தராததை அடுத்து அதிபர் சிறுவர் இல்ல காப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவர் இல்ல உதவி காப்பாளர் பிபில காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
காணாமற்போன பதினாறு வயதுடைய இரு மாணவிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. மாணவிகளை கண்டுபிடிக்க விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிபில காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். தெபல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளை காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் பிபில பிரதேசத்தில் உள்ள சிறுமிகள் காப்பகத்தைச் சேர்ந்த மாணவிகளே காணாமற் போனவர்களாவர்.
பாடசாலை புத்தகப்பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு
தமது பாடசாலை புத்தகப்பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு இவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி சென்ற நிலையில் மீண்டும் வகுப்பறைக்கு வருகை தராததை அடுத்து அதிபர் சிறுவர் இல்ல காப்பாளருக்கு அறிவித்துள்ளார்.இதனையடுத்து சிறுவர் இல்ல உதவி காப்பாளர் பிபில காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
மாணவிகளை கண்டுபிடிக்க விசேட காவல்துறை குழு
காணாமற்போன பதினாறு வயதுடைய இரு மாணவிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. மாணவிகளை கண்டுபிடிக்க விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிபில காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.