பாடசாலையில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் கைது- வெலிமடை சம்பவம்

0
154

மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டிய ஆசிரியர்கள் தவறு செய்தால் மாணவர்களின் நிலை என்னவாகும். அப்படியான ஒரு சம்பவமே வெலிமடை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றது.

கடமை நேரத்தில் போதைப்பொருள் (கஞ்சா) புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சங்கீத வகுப்பறையில் கஞ்சா போதைப்பொருளை புகைத்துக்கொண்டிருந்தபோது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இரகசிய தகவலை அடுத்து பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் ஆசிரியர்களை கைது செய்யும்போது சந்தேகநபர்கள் வசமிருந்து1.9 கிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

வெலிமடை காவல் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்ரமின் தலைமையிலான காவல்துறை குழுவே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here