பாடசாலையொன்றில் இருந்து 7 மோட்டர் குண்டுகள் மீட்பு!

0
118

வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போதே குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து மோட்டர் குண்டுகளை கைப்பற்றியுள்ளதோடு அக் குண்டுகளை அழிப்பதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here