பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் போன்று சமூகத்துக்கும் பாரிய பொறுப்பு உள்ளது என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பல துர்பாக்கியமான சம்பவங்கள் பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்றுள்ளமை மிகவும் கவலைக்குறியதும் கண்டிக்க தக்கதுமான விடயமாகும்.
இந்த சமபவத்தில் தங்களுடைய குழந்தைகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்ற அதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பாக தமது கண்டனத்தயும் பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி வித்தியாவின் சம்பவம் எமக்கு பல பாடங்களை கற்றுத் தந்தாலும் அதன் பிறகு மீண்டும் இவ்வாறான ஒரு துர்பாக்கியமான சம்பவம் நடைபெற்றுள்ளமையானது இன்னும் எங்களுடைய சட்டத்துறையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக சட்டங்கள் இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை எம்முல் வலுக்கச் செய்கிறது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக செயற்படுகின்ற அரசாங்க திணைக்களங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன இது தொடர்பாக இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கான முழுமையான ஒத்தழைப்பை வழங்க கல்வி அமைச்சு தயாராக இருக்கின்றது.
அதே நேரத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விசேட விழிப்புணர்வூகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.