பாடசாலை மாணவர்களுக்கு தடையின்றி சீருடைகள் வழங்கப்படும்

0
109

அடுத்த ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் அடிப்படை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான அனைத்து பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டு திட்டமிட்டபடி சீருடைகள் வழங்கப்படும்.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் சீன தூதரகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் அடிப்படை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியாரால் மேற்கொள்ளப்படும் பாடப்புத்தக அச்சிடும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்கான அனைத்து கொடுப்பனவுகளும் ஏப்ரல் மாதம் வரை செலுத்தப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் கொடுப்பனவுகள் நிதி ஆணைக்குழுவினால் ஒதுக்கப்படும் பணத்தில் அந்தந்த மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here