பாடசாலை மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது!

0
200

பாடசாலை மாணவியை அப்பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஐந்தாம் தரத்தை சேர்ந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவரும் மாணவியையே இவ்வாறு தாக்கி உள்ளார்.

அதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் செய்த முறைபாட்டிற்கு அமைய ஹுங்கம காவல்துறையினர் அவ் ஆசிரியரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவ் ஆசிரியர் தனது மகளை தொடர்ந்து தாக்கி உள்ளதாக அவ் முறைப்பாட்டில் தாயார் பதிவு செய்துள்ளார்.

மேலும் அச் சிறுமி தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் சிறுமியின் வகுப்பாசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here