பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது சிலர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் அவன் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுகன்னாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிலிமத்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் இந்த மாணவன் தரம் 11 இல் கல்வி கற்று இன்று (28) மதியம் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பிலிமத்தலாவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவனை சம்பவ இடத்திலிருந்தவர்கள் பேராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவனுக்கு அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒரே பாடசாலையில் பாடசாலைக் கல்வியை முடித்த மூன்று மாணவர்கள் எனவும், வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இரு சகோதரர்களும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணமென விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடுகன்னாவ காவல்துறையினர் கூறியதுடன், வாள்வெட்டு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.