2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 12.13, 2024 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் பாடசாலை விடுமுறைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.