பாட்டியின் கழுத்தை அறுத்து கொன்ற பேரன்

0
130

பதுரலிய, ஹெடிகல்ல காலனி,பொல்துன்ன பிரதேசத்தில் வசித்து வந்த லீலாவதி விக்ரமசிங்க என்ற பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டதாக கூறப்படும் 24 வயதான பேரனை தாம் கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுரலிய, ஹெடிகல்ல காலனி,பொல்துன்ன பிரதேசத்தில் வசித்து வந்த லீலாவதி விக்ரமசிங்க என்ற பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்மணி, சந்தேக நபர் வசித்து வந்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் தனது தாயாருக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி இந்த கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்மணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (26) வீட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால், ஆத்திரமடைந்து, சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு மதுபானம் அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர், தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, உடலை அருகில் உள்ிள காட்டிற்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் குறித்து பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here